கடல்வழி வணிகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்து சுற்றிச் சுழல்கிறது அகிலன் திரைப்படம்.
பூலோகம் படத்தின் அமர்க்களமான வெற்றிக்கு பின்னர், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி – இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் கூட்டணியில் வெளிவந்துள்ள படம்.
இந்திய பெருங்கடலில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்களின் மூலவராக வருகிறார் கபூர். அவரது இடத்தை அகிலனாக வரும் ஜெயம் ரவி கைப்பற்ற விரும்புகிறார். இதற்கான காரணமும், முயற்சிகளும் தான் படத்தின் கதை. கடைசியில் கதாநாயகன் தனது இலக்கை அடைந்தாரா என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.
ஜெயம் ரவி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கி்றார். நெகடிவ் ரோலில் அசத்தியுள்ளார்.
பெண் போலீஸ் வேடத்தில் பிரியா பவானி சங்கர் செம அழகு. கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
தான்யா இப்படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். சும்மா ஒப்புக்கு வந்து செல்கிறார்.
வில்லன் கபூராக வரும் தருண் அரோரா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். வாவ்…
கல்யாண கிருஷ்ணன் நல்ல கதையை தானே எழுதியிருப்பது கதையின் நகர்வுக்கும் பெரிதும் கைகொடுத்துள்ளது. உள்ளூர் முதல் உலக அரசியல் வரை படம் பேசியுள்ளது. பசி குறித்து உரைக்கும் வகையில் கூறியிருக்கிறார்கள். இதற்காகவே இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
விவேக் ஆனந்தின் கேமரா கோணங்கள் பிரம்மாண்டம். கடல் மற்றும் துறைமுகங்களை அழகாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர். துறைமுகத்தை நாம் நேரில் கண்டது போன்ற உணர்வு படம் முடிந்து வெளியே வரும்போதும் தொடர்கிறது.
“அகிலன்” – அகிலத் தமிழர்களின் இதயங்களை வென்றான்.
– நிருபர் நாராயணன்