நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் திரைப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், படத்தில் பிரசாந்த் பியானோ இசைக்கலைஞராக வருகிறார். இந்தத் திரைப்பட தமிழ் உரிமையை வாங்குவதற்கு முக்கிய காரணமே கதாநாயகன் பியானோ இசைக்கலைஞர் என்பதால் தான். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்வே பழகினர். சமுத்திரக்கனி நடிப்பில் சிங்கம், படத்தில் அவர் மிரட்டி இருக்கிறார். பிரியா ஆனந்த் அழகான தமிழ் பெண். இந்த படத்தின் மூலம் அவருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
நடிகர் பிரசாந்த் பேசுகையில், திரையுலகில் எனக்கு கிடைத்த அற்புதமான தோழி சிம்ரன். என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். ஆகஸ்ட் 9-ம் தேதி ‘அந்தகன்’ வெளியாகிறது. படத்தை ரசிகர்களாகிய நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், அந்தகன் விஷுவலாகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் நிச்சயமாக மாபெரும் வெற்றிப் படமாக அமையும். மீண்டும் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றார்.
நடிகை சிம்ரன் பேசுகையில், தியாகராஜன் சார் இயக்கத்தில் அந்தகன் மிகச்சிறந்த படமாக தயாராகியுள்ளது. இது பிரசாத்துடன் நான் நடிக்கும் 7-வது திரைப்படம். மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறேன் என குறிப்பிட்டார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், இந்தப் படத்தில் நடித்தபோது சக நடிகர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட அனைவரிடமும் தியாகராஜனும் பிரசாந்தும் அதிக பாசத்துடன் பழகியது நெகிழச்சியான தருணமாக உள்ளது என்றார்.
– நிருபர் நாராயணன்