தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் உதயநிதிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.
இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன், துணைத் தலைவர் ராமசுப்ரமணி, இணை செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோரும் டாக்டர் ஐசரி கணேஷுடன் சென்றிருந்தனர்.
மேலும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ராவும் உடனிருந்தார்.
– நிருபர் நாராயணன்