அம்பத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை அன்று அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. டெல்லி பாபு மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.