தமிழ் காதல்…!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள இவர்களது திருமண பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் போட்டி தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவர காதலித்து வந்தார்.
இதையடுத்து மேக்ஸ்வெல் மற்றும் வினிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு, இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து மத வழக்கப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கொரோனா பரவஸ் காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், தற்போது கிளென் மேக்ஸ்வெல்-வினிராமன் திருமணம் வரும் மார்ச் 27ம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. வினி ராமன் தமிழகத்தை சேர்ந்த பெண் என்பதால் இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் நிறத் தாளில் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.