நகரில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, படத்தின் தலைப்புக்கு ஏற்ப முடிவற்ற தன்மையாக தொடர்ந்து சில விஐபிகளும் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க வரும் சிபிஐ அதிகாரியாக இயக்குநர் நட்ராஜ் நடித்துள்ளார். எப்போதும் மாறுபட்ட படங்களில், கேரக்டர்களில் நடித்து பட்டையைக் கிளப்பும் நட்ராஜ் இந்த படத்திலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டுகிறார்.
குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் நட்ராஜ் தடுமாறுகிறார். அதேநேரத்தில் மருத்துவர் வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். இதையடுத்து அவரையும் தனது கண்காணிப்பு வளையத்தில் வைக்கிறார் சிபிஐ அதிகாரி.
பெண் டாக்டரை சுற்றி நடக்கும் மர்மங்கள் மற்றும் நட்ராஜ் கொலையாளியை எப்படி பிடித்தார் என்பது தான் படத்தின் மீதிக்கதை. வழக்கம் போல் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிரார் நட்ராஜ். ஒவ்வொரு காட்சியிலும் தேவையான எனர்ஜியுடன் நடித்து தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
அழகான டாக்டராக வித்யா பிரதீப் நேர்த்தியான பங்களிப்பை தந்திருக்கிறார்.
இசையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாலசுப்பிரமணியன். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு அதற்கு உறுதுணையாக இருக்கிறது.
சிறப்பான திரைக்கதையுடன் திரில்லர் படத்தை அழகாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் சாய் கார்த்திக். அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.
மிகச்சிறந்த பொழுதுபோக்கு படம். தாராளமாக தியேட்டருக்கு சென்று ரசித்து பார்க்கலாம்.
– நிருபர் நாராயணன்