சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
காவல்துறைப் பணியில் கனிவு, கண்டிப்பு என 35 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றிய இவர், திருமுல்லைவாயல், அண்ணா நகர் உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.
உதவி ஆய்வாளர் சுந்தரராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா நேற்று சென்னை அன்னனூரில் நடைபெற்றது. இதில், அவருக்கும் அவரது மனைவிக்கும் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். விழாவில், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திரு. சி.சுந்தரராஜன் கடமையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பணியாற்றினார் என்பது குறித்து ஓய்வு பெற்ற எஸ்.ஐ. திரு. ஜேம்ஸ் அவர்கள் எடுத்துக் கூறியது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பிலும் அவருக்கு அன்பான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
– நிருபர் நாராயணன்