உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு என்பது, அதன் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பு மற்றும் சரிசெய்யப்பட்ட நிகர சொத்து மதிப்பாகும். இந்த உள்பொதிந்த மதிப்பு, எல்.ஐ.சி.,யின் சந்தை மதிப்பை நிலைநிறுத்தவும், அதன் புதிய பங்கு வெளியீட்டை தீர்மானிக்கவும் உதவும். அடுத்த மாதம் சந்தையில் எல்.ஐ.சி பங்குகள் பட்டியலிடப்பட உள்ளது.
எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் உள்பொதிந்த மதிப்பை மத்திய அரசு கணித்துள்ளது. அதன் உள்பொதிந்த மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனிடையே எல்.ஐ.சி சந்தை மதிப்பு என்பது உள்பொதிந்த மதிப்பை விட சுமார் 4 மடங்கு அதிகமாக இருக்கும், என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.