ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் நடுவே, சிறிய நாடுகளுக்கான மாநாடும் நடைபெற்றது. இதில் கைலாசா நாட்டின் பிரதிநிதியாக நித்தியானந்தாவின் சிஷ்யை விஜயபிரியா என்பவர் பங்கேற்றுள்ளார்.
ஆப்ரிக்கா மற்றும் கரிபீயன் பகுதியில் ஏராளமான குட்டி நாடுகள் உள்ள நிலையில், அவற்றின் பிரதிநிதிகளை, ஐ.நா. மாநாட்டில், கைலாசாவின் பெண் தூதர் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ருத்ராட்சை அணிந்து ஜடாமுடியுடன் காணப்படும் விஜயபிரியா, தனது கையில் சாமியார் நித்தியானந்தாவின் உருவத்தையும் பச்சை குத்தியுள்ளார். ஐ.நா.வில் பிற நாட்டு பிரதிதிகளுக்கு அவர் நித்தியானந்தா தொடர்பான புத்தகத்தை பரிசளித்தார்.
தற்போது உடல்நலம் தேறியுள்ள கைலாசா அதிபர் நித்தியானந்தா, தனது நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். அந்தவகையில், ஐ.நா.வில் அவருக்கு இதுவொரு சிறிய வெற்றி என்றே கூறலாம்.