புகைப்படம்: புலித்தேவன்
சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின் இளைய மகள் ஜெர்சி தயாமின் அமிர்தாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த நல்லமாடன் – பாலம்மாள் தம்பதியின் மகன் முத்துராஜ்-க்கும் சென்னை ஆவடியில் திருமணம் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
காவல்துறையில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஜேம்ஸ், பணியின் போது பொதுமக்களிடம் இனிமையாக பழகக்கூடியவர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார். காவல்துறையில் இவரது சிறப்பான சேவையை கெளரவிக்கும் வகையில், நிருபர் டைம்ஸ் பத்திரிகை அவருக்கு விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
– நிருபர் ஆர். நாராயணன்