‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”.
நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியலயா நடித்துள்ளார். தம்பி ராமையா, முனிஸ்காந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் 3-வது பாடலான “மாலு மாலு” வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.
சென்னையில் இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசியதாவது:
நான் வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு கடன் கேட்டு தயாரிப்பாளர் அன்புசெழியனை சந்திக்கச் சென்றேன். ஆனால், அவரோ கடன் வாங்கி வீடு கட்டாதீர்கள் என அறிவுரை கூறியதுடன், நான் கேட்ட பணத்தை அட்வான்ஸாகவே கொடுத்து, நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்றார். அப்படித்தான் “இங்க நான் தான் கிங்கு” பட வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்தில் அரசியல் ரீதியான கருத்துக்கள் எல்லாம் கிடையாது. “இங்க நான் தான் கிங்கு” என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வசனம். அதையே எனது படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம். அவ்வளவு தான்.
இவ்வாறு நடிகர் சந்தானம் பேசினார்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 10-ம் தேதிக்கு பதில் மே 17-ம் தேதி என படக்குழு அறிவித்துள்ளது.
– நிருபர் நாராயணன்