புதுமுக நடிகராக அறிமுகமாகும் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் கட்ஸ்.
சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாரயணன் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, இயக்குநர் சிவானி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகை ஸ்ருதி நாராயணன், “கட்ஸ் படத்தில் நான் 2-வது ஹீரோயினாக நடித்திருக்கிறேன். ஆனால், அந்த கேரக்டர் நடிப்புக்கு தீனி போடும் வகையில் நன்றாக இருக்கிறது. இப்படத்தில் வாய்ப்பு தந்து கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை சிறப்பாக சொல்லிக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. கட்ஸ் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
– நிருபர் நாராயணன்