அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.
காதலை ஒரு மாறுபட்ட கோணத்தில் கேமராவில் அழகுற சொல்லும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகம் கௌஷிக் ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். டாணாக்காரன் படப் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கதாநாயகி அஞ்சலி நாயர் பேசுகையில், “இந்த அருமையான படத்தில் எனக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்தற்கு மிகவும் நன்றி. ராதே கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஹரி மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. படப்பிடிப்பில் ஹெரோஷினி எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். உங்கள் ஆதரவை எங்களுக்கும் தாருங்கள்” என்றார்.