முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில், முதலமைச்சர் கேக் வெட்டி கொண்டாடினார். இதில், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.