“செம்பி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் கலர்ஃபுல்லாக நடைபெற்றது.
கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர். எண்டர்டெயின்மன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியிட்டு விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு இசையை வெளியிட்டு, படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “சதிலீலாவதி படத்தில் கிட்டத்திட்ட எனக்கு குருவாக இருந்தவர் கோவை சரளா. அவர் நடிக்கும் “செம்பி” படத்தின் இசையை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல ரசனையை சினிமா கலை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு படம் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது நன்றாக இருந்தாலோ அல்லது நன்றாக இல்லை என்றாலோ அந்த விமர்சனத்தை தைரியமாக முன்வையுங்கள்”.
இவ்வாறு கமல்ஹாசன் விழாவில் பேசினார்.