தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவருக்கு கோலிவுட்டில் தனியிடம் பெற்றுத்தர, அடுத்து சீமராஜா திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது எனலாம்.
தற்போது தீபாவளிக்கு வெளியான டாக்டர் 100 கோடி ரூபாய் வசூலை குவிக்க, பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் சிவகார்த்திகேயன். அப்படியே தனது சம்பளத்தையும் கொஞ்சம் உயர்த்திவிட்டார். தற்போது அவரது சம்பளம் 30 கோடி ரூபாய். இதன் மூலம், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்து சம்பள வரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்த புதிய டாக்டர்.
வாழ்த்துக்கள்.