நீங்கள் காணும் மனதை வேதனை அடையச் செய்யும் இந்த புகைப்படம், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் (86-வது வார்டு) ராமபூர்ணம் நகர் விரிவாக்கம் 4-வது குறுக்குத் தெருவில் எடுக்கப்பட்டது.
இந்திய தேசியக் கொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றின் கீழ், தேசியக் கொடியை எப்படி கையாள்வது என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி தேசியக் கொடியை தரையில் விழ அனுமதிப்பது குற்றமாகும்.
ஆனால், யாரோ சில மூடர்கள் அல்லது சமூக விரோதிகள், பாரதத் தாயை அவமதிக்கும் வகையில் உயிருக்கு நிகராக மதிக்க வேண்டிய தேசியக் கொடியை, இப்படி குப்பையில் வீசிச் சென்றிருப்பது மனதை பிழிவதாக உள்ளது. இந்த மாபாதக செயலை செய்தது அருகேயுள்ள அரசு அலுவலக அதிகாரிகளா அல்லது தனியார் பள்ளி அல்லது தனியார் நிறுவனமா?
சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே ராமபூர்ணம் நகர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அம்பத்தூர் போலீசார் செய்வார்களா?
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பார்வைக்கும் இந்த செய்தியை முன்வைக்கிறோம்.
தேசியக் கொடி அவமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். கூடுதலாக அபராதமும் உண்டு.
சட்டம் தன் கடமையை செய்யட்டும்…! ஊர்குருவி காத்திருக்கிறது…
– புலித்தேவன், செய்தியாளர்