ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளிவந்துள்ளது.
1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.
சிறைக் கைதியாக வரும் செல்வராகவன் சிறைக்குள் இருந்தபடி கட்டப்பஞ்சயத்து, போதை மருந்து விற்பனை என சென்னையை ஆட்டிப் படைக்கிறார். அதே நேரத்தில் பல்வேறு கனவுகளுடன் உலா வந்த ஆர்.ஜே. பாலாஜி சூழ்நிலையில் சிக்கி சிறை செல்ல நேரிடுகிறது. அவர்களுக்குள் என்ன தொடர்பு, கதாநாயகன் தனது லட்சியத்தை எட்டினாரா, செல்வராகவன் என்ன ஆனார் என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலாக படத்தின் மீதிக்கதை அமைந்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். அருமையான நடிப்பை தந்திருக்கிறார்.
செல்வராகவன், சானியா அய்யப்பன், நட்டி நட்ராஜ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அனைவரும் யதார்த்தமான நடிப்பில் நம் நெஞ்சில் குடிகொள்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கதை நகர்கிறது. இயக்குநரின் உழைப்பை ஒவ்வொரு ஃபிரேமிலும் உணர முடிகிறது.
கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பிளஸ் என்றே கூறலாம்.
தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதை புதிது என்றாலும், கலையை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் இதுவொரு சொர்க்கவாசல் தான்.
– நிருபர் நாராயணன்