நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”.
பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு கடைசியில் ஒரு ரவுடியிடம் கார் டிரைவராக வேலை செய்கிறார் சித்தார்த்.
இதனிடையே ஒரு பணக்காரப் பெண் கடத்தல் கும்பலில் இருந்து தப்பி எதிர்பாராத விதமாக சித்தார்த்தை சந்திக்கிறார். அவர்களிடையே காதல் மலர்கிறது.
கடத்தல் கும்பலிடம் இருந்து கதாநாயகியை நமது ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சாக்லேட் பாயாக இளைஞிகளின் மனம் கவர்ந்த சித்தார்த்தை, ஆக்சன் ஹீரோவாக பார்ப்பது வித்தியாசமாக உள்ளது. மேலும், சித்தார்த்தின் நடிப்பில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கார் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட்டை மிஞ்சுவதாக உள்ளது.
திவ்யன்ஷாவின் நடிப்பும், கிளாமரான கதாபாத்திரமும் அற்புதமாக படத்தை நகர்த்தி செல்கிறது.
யோகி பாபுவின் நகைச்சுவை படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.
கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் காதல், காமெடி, ஆக்சன் கலந்த கலவையாக வெளிவந்துள்ள “டக்கர்” செம டக்கர் என்றே கூறலாம்.
– நிருபர் நாராயணன்