சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட உள்ட்டமைப்பை மேம்படுத்துதல், பழமையான, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றுதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவில், பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் மாறிவிட்டது. காணொலி மூலம் விசாரணை இ-ஃபைலிங் போன்ற சட்ட சேவைகளில் டிஜிட்டல் வசதி இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமாகி பயன்பாட்டில் உள்ளது. அந்தவகையில், தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள 5-ஜி சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம் காணலாம்.
அவசியமில்லாத, பயனற்ற காலனித்துவ சட்டங்களை நீக்குவது முக்கியம். அப்போது தான் நம் நாடு உண்மையான முன்னேறத்தை காணமுடியும்.
சட்டங்கள் எளிமையான மற்றும் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும். இதனால் அதில் எழுதப்பட்டிருப்பதை சாமான்ய மக்களும் புரிந்து கொள்ள முடியும்.
நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாக உள்ளது. இது களையப்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.