நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய சிம்பு, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முந்தைய பாகங்களை ரசித்து பார்த்தேன். இந்தப் படத்திலும் சந்தானம் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு பிடித்த ஹீரோக்கள், இயக்குநர்கள் ஆகியோருடன் இணைந்து காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என சந்தானத்திடம் கேட்டுக் கொள்கிறேன். படத்தை தயாரித்துள்ள நடிகர் ஆர்யாவுக்கு இது மாபெரும் வெற்றிப் படமாக அமைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றார்.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சந்தானம், கெளதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சினிமா விமர்சகராக சந்தானம் நடித்திருக்கிறார்.
தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ சை அமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லரில், கௌதம் மேனனை வைத்து உயிரின் உயிரே பாடலை ரீ க்ரியேட் செய்துள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.