திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் திருச்செந்தூர் நகராட்சி கூடுதல் சொத்து வரியை விதித்ததை கண்டித்தும் இன்று காலை 11 மணிக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக மாணவர் இயக்கம் சார்பில் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக மாணவர் இயக்க மாநில செயலாளர் சிவநேசன், பொருளாளர் திருப்பதி விஜி, தலைமை வழக்கறிஞர் பிரகாஷ், தென் மண்டல அமைப்பாளர் அமுதா மெஸ் பட்டு, தொகுதி செயலாளர் ஜெயக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் கணேசன் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் நல இயக்க துணை தலைவர் வன்னியபெருமாள், பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.