பரபரப்பாக விற்பனை ஆகும் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்

465 0

நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த்

‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனை ஆகிறது, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவரும் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவருமான ரமேஷ் அரவிந்த் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளரும் கூட.

கர்நாடகா முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் பேச்சுக்கள், பயிற்சிகளை வழங்கி வரும் ரமேஷ் அரவிந்த், கல்வி, வாழ்க்கை, பணி, மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களையும் எழுதி வருகிறார்.

இந்த வரிசையில் இவர் எழுதியுள்ள ‘அன்புடன் ரமேஷ்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி சென்னை புத்தகக் கண்காட்சியில் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது. சவன்னா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் அகநாழிகை அரங்குகளான 520 மற்றும் 521-ல் கிடைக்கும். மேலும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

ரமேஷ் அரவிந்த் வழங்கிய ஊக்கமூட்டும் பேச்சுகளின் முக்கிய மற்றும் சுவாரஸ்யமான பகுதிகளின் தொகுப்பான இந்த புத்தகம், ‘ப்ரிதியிந்த ரமேஷ்’ என்ற பெயரில் கன்னடாவில் வெளியாகி ஆறே மாதங்களில் ஏழு பதிப்புகள் என பெரும் வெற்றி பெற்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பாகும். கே. நல்லதம்பி இதை சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

புத்தகம் குறித்து பேசிய ரமேஷ் அரவிந்த், “ஒருவர் வாழ்க்கையிலும் தொழில் அல்லது பணியிலும் வெற்றி பெற்று செல்வந்தராக உயர‌ 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் சில மாற்றங்களை செயல்படுத்தி, வியூகங்கள் வகுத்து அதற்கு ஏற்ப உழைத்தால் 6 முதல் 8 ஆண்டுகளிலேயே இலக்குகளை அடைந்து விடலாம். இந்த மாற்றங்கள், வியூகங்கள் மற்றும் உழைப்பு குறித்தும், நேர்வழியில் விரைவில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம்முடன் பணியாற்றுபவர்களையும் நமது குடும்பத்தினரையும் நமது சிறு செயல்கள் மூலமே உற்சாகப்படுத்தி விடலாம். இதன் மூலம் நமது பணியிடத்திலும், வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது குறித்தும் எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எடுத்துரைத்துள்ளேன்,” என்று தெரிவித்தார்.

‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் திறமைகளை எப்போதும் உரிய முறையில் அங்கீகரிக்கும் தமிழக மக்கள் இந்த புத்தகத்தையும் வாங்கி, படித்து பாராட்டுவார்கள் என்று தான் நம்புவதாகவும் ரமேஷ் அரவிந்த் கூறினார்.

Related Post

மக்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted by - May 13, 2023 0
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். பாரதி…

ஆதார் – பான் இணைக்க இன்று கடைசி நாள்

Posted by - March 31, 2022 0
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான கடைசி நாள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

Posted by - January 5, 2023 0
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…

அம்பத்தூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 22, 2022 0
அம்பத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை அன்று அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதைப்பொருள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.