ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், RJ, சின்னத்திரை தொகுப்பாளர், நடிகர் என பன்முகத்திறன் கொண்ட பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் வெப் சீரிஸ் “பானி பூரி”.
வெப் சீரிஸ் ஹீரோ லிங்காவின் பெயரான தாண்டாயுதபாணியில் இருந்து பானியையும், ஹீரோயின் சாம்பிகாவின் பெயரான பூர்ணிமாவின் பெயரில் இருந்து பூரியையும் எடுத்து “பானி பூரி” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இத்தொடருக்கான திரையிடல் மற்றும் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கதாநாயகன் லிங்கா பேசுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த பாலாஜி வேணுகோபாலுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கதாநாயகி சாம்பிகா பேசுகையில், “இந்த தொடர் எங்களுக்குப் பிடித்தது போலவே ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
சாம்பிகா சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானியாக இருக்கிறார். கோவையை சேர்ந்த லிங்காவுடன் காதல் மலமர, திருமணதிற்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வீட்டில் இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் ஏழு நாட்கள் வசிக்க முடிவு செய்து ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் தங்குகிறார்கள். அங்கு பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதன் பிறகு ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.
இன்றைய நவீன உலகில் அதிகரித்து வரும் சிங்கிள் பேரன்ட் கலாச்சாரம் பற்றி அலசுகிறது இந்த வெப் தொடர். அழகாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால். தமிழ் வெப் தொடர் வரலாற்றில் இந்த “பானி பூரி”க்கு எப்போதும் தனியிடம் உண்டு என உறுதிாக சொல்லலாம்.
– நிருபர் நாராயணன்