சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
பாரதி சாலையில் உள்ள சம்பந்தப்பட கடைக்குள் பாம்பு இருப்பதாக வந்த தகவல் கிடைத்தவுடன், ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி அ. சிவஞானம் உடனடியாக சக ஊழியர்கள் நவநீதகிருஷ்ணன், பச்சையப்பன், அருண்குமார், கணேஷ் ஆகியோருடன் விரைந்து வந்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் தீவிரமாக தேடி, உள்ளே புகுந்த நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துச் சென்றனர். அதன்பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தகவல் அளித்தவுடன் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்த ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு நிலைய ஊழியர்களுக்கு முகப்பேர் பகுதி மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
– புலித்தேவன்