‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

412 0

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக்பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நடிகை ஆனந்தி பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. :கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மங்கை’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். படம் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.

தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அவ்வளவு உழைத்திருக்கிறார். எக்ஸீகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் சார் எல்லா வேலைகளையும் எடுத்து செய்வார். எல்லாவித உதவிகளையும் எல்லோருக்கும் செய்பவர். அவருக்கு நன்றி. இன்றைய விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி.

ஷிவின் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருக்கிறார். அது போல் துஷி எனக்கு நல்ல நண்பர். ஜே.பி சாரின் பையன் என்பதை எல்லாம் காட்டிக்கொண்டதே இல்லை. நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பீர்கள். இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.” நன்றி.

நடிகர் துஷ்யந்த் பேசும் போது…

தீசன் பிரதரின் பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இப்படி அருமையான பாடல்களைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி. மலைப் பாதையில் இரண்டு கேமராக்களைக் கட்டிய காரை கவனமாக ஓட்டியபடி, பெரிய பெரிய வசனங்களைப் பேசி, ஆனந்தி மேடத்திற்க்கு ஈடு கொடுத்து நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில்…

‘மங்கை’ திரைப்படத்தினை சிறப்பாக வெளியீட்டிற்கு முன்னெடுத்துச் செல்லும் தயாரிப்பாளர் ஜாஃபருக்கு வாழ்த்துகளும் நன்றியும். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் இன்னும் பத்து இயக்குநர்கள் வருவார்கள். இங்கு சேரன் சார், சசிக்குமார் சார் மற்றும் சமுத்திரக்கனி சார் மூவரும் வர வேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களால் வர முடியவில்லை.

‘பசங்க’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் எனக்குத் துணைக்கு நான் என் பையன் துஷியை அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். அப்படித் தான் துஷியின் திரை பயணம் துவங்கியது. அவர் நடிக்க வருவார் என்று நினைத்ததே இல்லை. ஏனென்றால் நான் நடிக்க வருவேன் என்பதே என்னால் நம்ப முடியாத விஷயம். ஆனந்தி மிகப்பெரிய கலைஞர். அவருடன் நடித்ததெல்லாம் துஷிக்கு நல்ல அனுபவம். அவன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.

என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விசயம் “Don’t do injustice to woman”. நல்ல படங்களை எப்போதும் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இப்படத்தையும் கொண்டு போய் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தயாரிப்பாளர் ஜாஃபர் பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். திரைப்பட இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு திரைப்படத்தை எடுப்பது மட்டுமே முக்கியமான வேலை இல்லை. அதை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் முக்கியமான வேலை என்று நான் நம்பி உழைத்துக் கொண்டிருக்கிறேன். ‘மங்கை’ மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. துஷி, கயல் ஆனந்தி மற்றும் சிறப்பான பாடல்கள் என ஒவ்வொன்றாக படத்தில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். இசையமைப்பாளராக கிடைத்த வாய்ப்பை தீசன் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்பதில் இருந்து தான் இப்பயணம் துவங்கியது. பத்திரிகை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை, ஊடக மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கு வணக்கம். தீசன் எப்போதுமே பாஸிட்டிவ் எனெர்ஜியுடன் இருப்பார். அவருக்கு மிக்க நன்றி. படப்பிடிப்புக்கு போகும் போது ஒரு பாடல் மட்டும்தான் இருந்தது. பின்னர் அது ஐந்து பாடல்களாக ஆனது. அதற்கு தீசனின் இசை ஒரு காரணம். பாடலாசிரியர்கள் கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா அனைவருக்கும் நன்றி.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜாஃபர் சார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டார் சார் அனைவருக்கும் நன்றி, படத்திற்கு பத்திரிகையாள்ர்களான் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். என் அம்மா, அப்பா, மனைவி மற்றும் கடவுளுக்கு நன்றி. என் மனைவிக்கு ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் வீட்டில் இருக்கும் மங்கை நன்றாக இருந்தால் தான் வெளியில் ஜெயிக்க முடியும். இந்த ‘மங்கை’ வெற்றிபெற வாழ்த்துகள். வாய்ப்பு கொடுத்த ஜாஃபர் சாருக்கு நன்றி.

இயக்குநர் குபேந்திரன் சார் சொன்னார் நாங்க ஒரு சின்ன படம் பண்றோம், சப்போர்ட் செய்யணும் என்று. படம் சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று சொன்னேன். இப்படத்தின் க்ளைமாக்ஸ் மங்கைகளுக்கும் மட்டுமின்றி ஆடவர்களுக்கும் மிக முக்கிய பாடமாக அமையும் என்று கூறி விடை பெறுகிறேன்.

 

Related Post

‘காலங்களில் அவள் வசந்தம்’ – இசை வெளியீட்டு விழா

Posted by - October 17, 2022 0
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதலை ஒரு மாறுபட்ட…

முதலிடத்தில் நடிகை ஜான்வி கபூரின் “மிலி” திரைப்படம்

Posted by - January 5, 2023 0
ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு…

பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்

Posted by - August 16, 2022 0
பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் கணேசமூர்த்தி இணைந்துள்ள இதன்…

ஒத்த ஓட்டு முத்தையா – சினிமா விமர்சனம்

Posted by - February 16, 2025 0
‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு…

பரம்பொருள் – திரைப்பட விமர்சனம்

Posted by - September 2, 2023 0
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “பரம்பொருள்”. நீண்ட காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தலை மையமாக கொண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.