மங்கை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

317 0

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  கதாநாயகன் துஷ்யந்த் பேசுகையில்…

“எல்லோருக்கும் வணக்கம். பொதுவாக நான் நிறைய பேசமாட்டேன். என் குருநாதர் சசிக்குமார் சாருக்கு நன்றி. ஈசன் படத்தில் அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் நான் இன்று இங்கு இல்லை. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு நாயை வைத்துத் தான் துவங்கினோம்,. காரில் இரண்டு கேமராக்களை மாட்டி இருப்பார்கள். இதையும் பார்க்க வேண்டும், ரோட்டையும் பார்த்து கார் ஓட்ட வேண்டும். இதில் டயலாக்கை நினைவில் கொள்ள வேண்டும். உடன் நடிக்கும் நபர்களின் ரியாக்ஷன்களையும் கவனிக்க வேண்டும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி, வணக்கம்.”

நடிகை ஆனந்தி பேசுகையில்…

“மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன்.
இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும். துஷி கார் ஓட்டிக் கொண்டே அழகாக நடித்திருக்கிறார். ராதிகா மாஸ்டர் உடனான போர்ஷன் கலகலப்பாக இருந்தது. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி. மிகச் சிறந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பிரஸ் அண்ட் மீடியா நீங்கள் எப்போதும் நல்ல படங்களுக்கு வரவேற்பு கொடுப்பீர்கள். இப்படத்திற்கும் அந்த வரவேற்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசியதாவது…

“என் கனவை நனவாக்கிய தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்களுக்கு நன்றி. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் என்றால் ஜாஃபர், சலீம், மைதீன் மூவரும் சகோதரர்கள். அவர்களை ஒன்றாகப் பார்க்கும் போது ஒரு பாசிட்டிவிட்டி கிடைக்கும். அவர்கள் மூவருக்கும் என் வாழ்நாள் முழுவதற்குமான அன்பும் நன்றியும். பிறகு என் உடன்பிறவா சகோதரர் கார்த்திக் துரை சாருக்கு நன்றி. இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிக முக்கிய காரணம் கார்த்திக் தான், படப்பிடிப்புத் தளத்தில் பல்வேறு பிரச்சனைகளை எங்களுக்காக சமாளித்தார். சினிமாத்தனம் இல்லாமல் பழக் கூடியவர் கார்த்திக் சார்.

ஆனந்தி மேடத்திற்கு நன்றி. இந்த கதாபாத்திரம் ஆனந்தி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியது ஜாஃபர் சார் தான். கதையைக் கேட்டுவிட்டு ஆனந்தி மேடம் 2 நிமிடம் யோசித்தார், பிறகு இப்படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினார். அவர் இல்லை என்றால் இப்படம் இந்த அளவிற்கு வந்திருக்காது, மிகவும் சின்சியரான ஆர்டிஸ்ட். சிவின் மேடம் நடித்த கதாபாத்திரம் பத்து நிமிடங்கள் வரும், ஆனால் இந்த கதைக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். ‘லவ் டுடே’ ரீலிசுக்குப் பின்னர் ரொம்பவே பிஸியாக இருந்தாலும் தேதி ஒதுக்கி நடித்துக் கொடுத்த கதிருக்கு நன்றி. துஷ்யந்த் நல்ல நடிகர், நல்ல டிரைவர், ஏனென்றால் மலைப்பகுதியில் கார் ஓட்டுவது போல் பல காட்சிகள் இருந்தது. சைலண்டாக இருந்து காட்சிகளில் நடிப்பால் எமோட் செய்வார். கவிதா பாரதி சார் மிகவும் உதவியாக இருந்தார். அவர் ஒரு இயக்குநர் என்பதால் பல ஐடியாக்கள் கொடுத்து உதவினார்.

தீசன் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்களும் அருமையாக வந்திருக்கின்றன. மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து கொடுத்த எஸ்.ஜே. ஸ்டார் சாருக்கு நன்றி. எடிட்டர் பார்த்திபன் ஆண்டனிக்கு நன்றி. இணை இயக்குநர் விக்ரம் ஆரம்பத்தில் இருந்து என்னுடனே இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படம் கருத்து சொல்கிற, பெண்ணியம் பேசுகின்ற படம் என்று இல்லை. இது எளிய, நேர்மையான முயற்சி. இன்னும் சொல்லப் போனால் இது ஆண்களுக்கான படம். வயது வந்த எதிர்பாலின ஈர்ப்பு இருக்கிற ஆண்கள், பெண்கள் இருவரும் பார்க்க வேண்டிய படம். பத்திரிகை நண்பர்கள் எப்போதும் நல்ல கண்டண்ட் உள்ள திரைப்படங்களுக்கு ஆதரவு தருவார்கள், அந்த ஆதரவை எங்களுக்கும் தர வேண்டும் . இதை உரிமையுடனும் அன்புடனும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.”

தயாரிப்பாளர் ஜாஃபர் பேசுகையில்…

“அனைவருக்கும் வணக்கம். அமீர் அண்ணாவின் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் மூலம் எங்கள் பயணம் துவங்கியது. ‘மங்கை’ எப்படி தொடங்கியது என்றால், குபேந்திரன் சார் முழு மனதுடன் எங்களோடு தொடர்பில் இருந்தார். அவரிடம் லோக்கேஷன் பார்த்துவிட்டு வரச் சொல்லி அனுப்பினோம். ஒரு வாரம் நேரம் கொடுத்தோம். ஆனால் மூன்று நாட்களில் முடித்துவிட்டு வந்துவிட்டார். அந்த டெடிகேஷன் தான் இன்று அவரை இயக்குநராக மாற்றி இருக்கிறது. இயக்குநரும் தயாரிப்பாளரும் நல்ல புரிதலுடன் இருந்தால் சினிமாவில் எந்தப் பிரச்சனையும் வராது. மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.”

Related Post

அகிலன் – திரை விமர்சனம்

Posted by - March 10, 2023 0
கடல்வழி வணிகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்து சுற்றிச் சுழல்கிறது அகிலன் திரைப்படம். பூலோகம் படத்தின் அமர்க்களமான வெற்றிக்கு பின்னர், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம்…

சிவகார்த்திகேயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - November 13, 2021 0
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவருக்கு கோலிவுட்டில் தனியிடம் பெற்றுத்தர, அடுத்து சீமராஜா திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நட்சத்திர…

“மார்கழி திங்கள்” – சினிமா விமர்சனம்

Posted by - October 27, 2023 0
மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்துள்ள கவித்துவமான திரைப்படம் “மார்கழி திங்கள்”. “என் இனிய தமிழ் மக்களே, என்னைப் போலவே எனது மகனையும் இயக்குநராக…

துணிவு – திரை விமர்சனம்

Posted by - January 12, 2023 0
வங்கியில் நுழையும் கொள்ளையர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மீட்பதும், தன் மீது விழும் தீவிரவாதி முத்திரையை எப்படி நீக்குகிறார் என்பதுமே துணிவு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.…

கோட் – சினிமா விமர்சனம்

Posted by - September 9, 2024 0
அரசியல் கட்சி தொடங்கிய பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள முதல் படம் GOAT (Greatest Of All Time). தீவிரவாதத் தடுப்பு படையின் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

twenty + fourteen =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.