சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்தின் 169-வது படத்தை, விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்குகிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் கேங் ஸ்டாராக ரஜினி நடிக்கிறார்.
“காலா” படத்தின் “மரண மாஸ்” பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய நிலையில், இந்த படத்திற்கும் ரஜினியின் உறவினரான அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.