‘லெவன் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா

25 0

.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டியும், மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தாவும், கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்திலும் பெற்றுள்ளனர்.

மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே,பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”நான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரைப்படத்தை பார்ப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. எனக்கு கிரைம் ஆக்ஷன் திரைப்படங்கள் தான் மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்களை பார்க்கும் போது மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விஷ‌யம் இருக்கும். அடுத்து என்ன என்ற இன்ட்ரஸ்ட் இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு திரைப்படங்களை தான் இந்த வகையில் இயக்கியிருக்கிறேன். ‘லெவன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் என்று சொன்னவுடன் ஆர்வம் ஆகிவிட்டேன்.‌ இந்தப் படத்தை 16ம் தேதி அன்றே பார்க்க வேண்டும் என்று ஆவலும் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கும். படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் தொடக்கப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இந்தத் திரைப்படத்தில் அழகான பாடல்களை வழங்கியதற்காக இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் அஜ்மலுடன் இணைந்து பணியாற்றுவது அனைத்து நட்சத்திரங்களுக்கும் இயல்பாக இருக்கும். அவருடைய அக்கறையும், அன்பும் அதிகம். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், ”இப்படத்தின் நாயகன் நவீன் சந்திராவிற்கும், இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமானுக்கும், தயாரிப்பாளர் அஜ்மலுக்கும் என் வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அவ‌ர் மேடையில் ஒன்றிணைத்திருக்கிறார்.

நான் ஊதா கலர் ரிப்பனின் ரசிகன். நான் எல்லா தருணத்திலும் முணுமுணுக்கும் பாடல் அது. இங்கு மேடையில் பேசிய விநியோகஸ்தர் மதுரை அழகர் எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். அவர் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கிறார் என்றால், இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.‌ அத்துடன் பிரபு சாலமன்- இமான் ‍ அக்பர் – இணைந்திருக்கிறார்கள் என்றால்.. அந்த படம் நன்றாக தான் இருக்கும்.

அக்பர் ஆடிட்டர் என்றாலும் சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். அதனால் தான் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டமும் , பாடல்களும் நன்றாக இருந்தன‌. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்ற படங்கள் ரசிகர்களை எப்படி இருக்கை நுனியில் வைத்திருந்தனவோ அதேபோல் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறேன், வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சி.‌ தயாரிப்பாளர்கள் அக்பர் – அஜ்மல் கான் ‍- ரியா ஹரி ஆகியோர்களுக்கு முதலில் நன்றி. திரையுலகில் 23 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை கிரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.‌ அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் திரைப்படம்.‌ இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.

என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.

இமான் சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷ‌னை இப்படத்தில் பார்க்கலாம்.‌ மே 16 அன்று ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்,” என்றார்.

நடிகை ரித்விகா பேசுகையில், “இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய‌ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அதற்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன், ” என்றார்.

நடிகர் நவீன் சந்திரா மிகப்பெரிய திறமைசாலி. அவருக்கு இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இமானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஃபாஸ்டஸ்ட் – எக்கனாமிக்- பிரண்ட்லி- லவ்லி – மியூசிக் டைரக்டர் இமானுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை வழங்க வேண்டும்,” என்றார்.

நடிகை ரியா ஹரி பேசுகையில், ”திரையுலகில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அக்பர் சார்தான்.‌ அவர் மீதான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நானும் அவருடைய பார்ட்னர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமான் சாரை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். அவருடனான சந்திப்பின்போது எப்போதும் ஒரு பாசிட்டிவிட்டியை பரவச் செய்து கொண்டிருப்பார். அவரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.

அவருடைய இசையில் முதல் பாடல் உருவான‌ போது இதுதான் என்னுடைய ஃபேவரிட்டான பாடல் என சொன்னேன்.‌ இரண்டாவது பாடல் உருவான போது இந்தப் பாடல் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்றேன். அதன் பிறகு காத்திருங்கள் தொடர்ச்சியாக பாடல்கள் வந்து கொண்டிருக்கிறது அனைத்து பாடல்களையும் கேளுங்கள் என்றனர். எனக்கு எல்லா பாடல்களும் பிடித்திருக்கிறது. ரசிகர்களுக்கும் அனைத்து பாடல்களும் பிடிக்கும். இதற்காக சரிகம நிறுவனத்திற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Related Post

மங்கை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - February 9, 2024 0
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின்,…

“அந்தகன்” படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீடு

Posted by - August 8, 2024 0
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் திரைப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா…

“ருத்ரன்” – திரை விமர்சனம்

Posted by - April 15, 2023 0
ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் உலகெங்கும் 1,500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பண விவகாரத்தில் நண்பரின்…

துணிவு – திரை விமர்சனம்

Posted by - January 12, 2023 0
வங்கியில் நுழையும் கொள்ளையர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மீட்பதும், தன் மீது விழும் தீவிரவாதி முத்திரையை எப்படி நீக்குகிறார் என்பதுமே துணிவு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.…

டீன்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - July 17, 2024 0
பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.