அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில், மானாவரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடந்த 20-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து, அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி தோட்டத்தில் சிறப்புற நடைபெற்றது.
இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வை.பெரியசாமி, துணை தோட்டக்கலை அலுவலர் நா.சண்முகவேல் ஆகிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கே.வி.கே.சோழமாதேவி டாக்டர்.கெளதீஷ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதற்காக உதவி தோட்டக்கலை அலுவலர்கள் க.பெரியசாமி, சி.பெருமாள் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர். முடிவில் ஜெஆர்எப். அபிமன்யு நன்றியுரை வழங்க, பயிற்சி இனிதே நிறைவுபெற்றது.
லாபம் அளித்து வாழ்வதாரத்தை பாதுகாக்கும் இந்த தேனீ வளர்ப்பு பயிற்சி, செந்துறை வட்டார விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற நல்முயற்சிகளுக்கு பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி உறுதுணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.