‘ஷூ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

685 0

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions  மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் இசையமைத்துள்ளார்.

புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திரைப்பட செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் சிறப்புற செய்திருந்தார். இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் நியாஷ் கூறியதாவது…

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானது எங்களுக்கு மகிழ்ச்சி. அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம் நன்றி.

தயாரிப்பாளர் கார்த்திக் கூறியதாவது…

இது எங்களுடைய முதல் திரைப்படம். இது குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கபட்ட கதை. இந்த படத்தை இயக்குனர் கல்யாண் மிகவும் சிரமப்பட்டு சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுகொள்கிறேன்.

நடிகை ஷஞ்சிதா ஷெட்டி கூறியதாவது…

படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது…

புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குனர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

இயக்குனர் கல்யாண் கூறியதாவது…

தயாரிப்பாளர் கடின உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உடைய பங்கு மிகப்பெரியது. இந்த படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நக்கீரன் கோபால் கூறியதாவது…

இந்த படத்தின் கதைகரு தான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம் தான் வருகிறார்கள் அது பற்றிய உண்மையை நாம் தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்த திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள்.

ஜாக்குவார் தங்கம் கூறியதாவது…

தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று இந்த தயாரிப்பாளர்களிடம் நான் கேட்டுகொள்கிறேன். இந்த படம் நிச்சயமாக வெற்றியடைந்தே தீரும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

நடிகை கோமல் ஷர்மா கூறியதாவது…

இது போன்ற கதைக்களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம், இப்படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக கருத்துகள் கொண்ட இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குனர் விருமாண்டி கூறியதாவது…

எல்லா இயக்குனருக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இயக்குனர் கல்யாண் இது போன்ற படத்தை உருவாக்கியது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இதுபோன்ற படங்களை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

பெப்சி சிவா கூறியதாவது…

இந்த படத்தின் தயாரிப்பாளர் தமிழ் சினிமாவிற்குள் முதன்முறையாக நுழைகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். நன்றி.

இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார். சாம் இசையமைத்துள்ளார்.

Netco Studios மற்றும் ATM Productions நிறுவனங்கள் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் மதுராஜ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார்.

Related Post

பரம்பொருள் – திரைப்பட விமர்சனம்

Posted by - September 2, 2023 0
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “பரம்பொருள்”. நீண்ட காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தலை மையமாக கொண்டு…

அரசியல்வாதிகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை

Posted by - April 19, 2024 0
விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் முன்வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது: “ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் நல்லது செய்தால் என்னை போன்ற நடிகர்கள்…

`லவ் டுடே’ – திரை விமர்சனம்

Posted by - November 5, 2022 0
காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். கோலிவுட்டில்…

ஆயிரம் பொற்காசுகள் – சினிமா விமர்சனம்

Posted by - December 22, 2023 0
ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள். சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் கிராமத்தில் ஜாலி பேர்வழியாக உலா வருகிறார். அவரது…

செம்பி – திரை விமர்சனம்

Posted by - December 29, 2022 0
அற்புதமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பும் செம்பியை வெற்றிப்பட வரிசையில் இணைத்திருக்கிறது. மைனா, கும்கி, கயல் ஆகிய மண்சார்ந்த வெற்றிப்படங்களை தந்த பிரபு சாலமனின் மாஸ்டர்பீஸ் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.