பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை தடுத்திட வேண்டும், பத்திரிகையாளர் நல வாரியம் உடனடியாக அமைத்திட வேண்டும், பதிவு பெற்று வெளிவரும் அனைத்து பத்திரிகைகளுக்கும் அரசு விளம்பரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், வார, மாத இதழ் மற்றும் செய்தி இணையதளம், இணைய தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் பணியாற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். – ஆர்.நாராயணன்