வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. தேனி மாவட்டம் பசுமலை என்னும் கிராமத்தை சேர்ந்த இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து ஆரம்பத்தில் துணை நடிகராக திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பின்னர், பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மின்சார