அம்பத்தூரில் டாஸ்மாக் பார் ஆக மாறிய நடைபாதை

Posted by - June 30, 2023

சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக இருந்தாலும், பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. அம்பத்தூரில் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகம் அருகே அமைந்துள்ள அம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்து திருவேற்காடு பேருந்து நிலையம் வரை, ஒரே நேர்கோடு போல் அமைந்துள்ள சாலையில் மட்டும் 11 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மொத்த தூரம் வெறும் 7.4

அம்பத்தூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 22, 2022

அம்பத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை அன்று அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. டெல்லி பாபு மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022

சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை சார்பில், ஸ்ரீவாரு பார்த்தசாரதி பேலஸ் மண்டபத்தில் இவ்விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு கலந்துகொண்டார். மேலும் சென்னை அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், அம்பத்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளிக் குழுமத்தின் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.