ரஜினி, விஜய் பாணியில் நானும் செல்கிறேன்: அமீர்
திரைப்பட இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறனின் வெற்றி கூட்டணியில் அமீர் கதாநாயகனாக நடிக்கும் படம் மாயவலை. அமீர் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது: “சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், தளபதி விஜய்க்கும் பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுகின்றனர். அதுபோல்