ஆகஸ்ட் 16, 1947 – திரை விமர்சனம்
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நாடு சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. நெல்லை சீமையின் செங்காடு கிராமத்தில் வெளியுலக தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் வசிக்கும் பாமர மக்கள் பருத்தி தொழில் சார்ந்து பிழைக்கின்றனர். அவர்களை ஆங்கிலேய அதிகாரி அடிமைகளை போல் நடத்துகிறார். அந்த அதிகாரியின் மகன் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரனாக உலா வருகிறான். இதனால் பயந்துபோன ஜமீன்தார் தனது மகள் ரேவதி சிறுவயதிலேயே இறந்துவிட்டதாக நாடகமாடி ஆங்கிலேயரின் மகன் கண்ணில்