‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper Society புகார் தெரிவித்துள்ளது. இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அமைப்பின் பொது செயலாளர் மேரி பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : செய்திக்காக முதலீடு, செலவு இந்திய செய்தி ஊடகங்கள் வாசகர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணையதளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைக்கின்றன. ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி,