“பபூன்” – திரை விமர்சனம்
ஒரு நாடகக் நடிகனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் திருப்பங்களையும் அழகுற பதிவு செய்திருக்கிறது “பபூன்”. கால ஓட்டத்தில் கரைந்து வரும் நாடகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க நாயகன் குமரனும் நண்பன் முத்தையாவும் திட்டமிடுகின்றனர். ஆனால் அதற்கு பணம் இல்லாத நிலையில் தற்காலிகமாக லாரி ஓட்டும் பணிக்கு செல்கின்றனர். அவர்கள் கொண்டு செல்வது போதைப்பொருள் என்பது அவர்களுக்கு தெரியாத சூழலில் போலீசாரிடம் சிக்குகின்றனர். அதன் பிறகு அவர்களின் நிலை என்ன? தங்களின் லட்சியத்தை