டாடா – திரை விமர்சனம்
பிக்பாஸ் புகழ் கவின் – பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள அழகான காதல், காமெடி கலந்த குடும்பப் படம் டாடா. கதாநாயகனும் கதாநாயகியும் ஒரே கல்லூரியில் பயிலும் நிலையில், காதலில் விழுந்து கல்யாணம் செய்யாமலேயே கர்ப்பமாகிறார் அபர்ணா தாஸ். பெற்றோர் இவர்களை ஏற்க மறுக்க, ஒருகட்டத்தில் செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார் கவின். இதனால் இருவரிடையே மோதல்கள் வெடிக்கின்றன. பிரசவ வலியில் துடிக்கும் போது, காதலனுக்கு செல்போனில் போன் போடுகிறார் அபர்ணா.