தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அப்போது திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசிபெற்றார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் சோழர் மன்னர்களின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். இதனை தொடர்ந்து புதிய