போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க பள்ளிக்கல்வித் துறையை தபால் துறை கேட்டுக் கொண்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தபால் துறையில் கிராம அஞ்சலக பணிக்கு உள்ளூர் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்கள் மற்றும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் பணியாற்ற தேர்வு