விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில், மானாவரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடந்த 20-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து, அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி தோட்டத்தில் சிறப்புற நடைபெற்றது. இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வை.பெரியசாமி, துணை தோட்டக்கலை அலுவலர் நா.சண்முகவேல் ஆகிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கே.வி.கே.சோழமாதேவி டாக்டர்.கெளதீஷ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதற்காக உதவி