திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும் பக்தர்களின்றி சூரசம்ஹாரத் திருவிழா நடைபெறுகிறது. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் இணையதளம் மற்றும் யூ டியூப் மூலம் நேரலையில் சூரசம்ஹாரத் திருவிழா ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, முருக பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதம் மேற்கொண்டுள்ளனர்.