“மார்கழி திங்கள்” – சினிமா விமர்சனம்

Posted by - October 27, 2023

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்துள்ள கவித்துவமான திரைப்படம் “மார்கழி திங்கள்”. “என் இனிய தமிழ் மக்களே, என்னைப் போலவே எனது மகனையும் இயக்குநராக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்ற கம்பீரக் குரலில் பாரதிராஜாவின் டிரேட்மார்க் அறிமுக வரிகளுடன் படம் தொடங்குகிறது. கதை, திரைக்கதை, வசனத்துடன் படத்தையும் தயாரித்துள்ளார் சுசீந்திரன். இயக்குநர் பொறுப்பை மனோஜ் பாரதிராஜாவிடம் கொடுத்திருக்கிறார். அவரது நம்பிக்கையை வீணாக்காமல் முதல் படத்திலேயே இயக்குநராக சிக்ஸர் அடித்திருக்கிறார் ராஜா வீட்டு கன்றுக்குட்டி…! திண்டுக்கல் அருகே ஒரு

டாடா – திரை விமர்சனம்

Posted by - February 11, 2023

பிக்பாஸ் புகழ் கவின் – பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள அழகான காதல், காமெடி கலந்த குடும்பப் படம் டாடா. கதாநாயகனும் கதாநாயகியும் ஒரே கல்லூரியில் பயிலும் நிலையில், காதலில் விழுந்து கல்யாணம் செய்யாமலேயே கர்ப்பமாகிறார் அபர்ணா தாஸ். பெற்றோர் இவர்களை ஏற்க மறுக்க, ஒருகட்டத்தில் செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார் கவின். இதனால் இருவரிடையே மோதல்கள் வெடிக்கின்றன. பிரசவ வலியில் துடிக்கும் போது, காதலனுக்கு செல்போனில் போன் போடுகிறார் அபர்ணா.

துணிவு – திரை விமர்சனம்

Posted by - January 12, 2023

வங்கியில் நுழையும் கொள்ளையர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மீட்பதும், தன் மீது விழும் தீவிரவாதி முத்திரையை எப்படி நீக்குகிறார் என்பதுமே துணிவு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. வெள்ளை தாடியில் அஜித்தின் அழகு மேலும் கூடியிருக்கிறது. காட்சிக்கு காட்சி ஆக்சன் தான். ரசிகர்களின் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அரங்கை அதிர வைக்கின்றன. ஜாலி நடனம், வில்லன் சிரிப்பு, நிதானமான வசனம், போலீசுக்கு தண்ணி காட்டுவது என சகலத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் அஜித். கதாநாயகி கேரளத்து அழகுக்கிளி மஞ்சு

ராங்கி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 31, 2022

லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ராங்கி. இப்படத்தில் த்ரிஷா ஒரு பத்திரிகையாளராக சூப்பராக நடித்துள்ளார் என்று தாராளமாக பாராட்டலாம். 40 வயதிலும் இளமை மாறாத த்ரிஷா, ஆன்லைன் பத்திரிகையாளரான தையல்நாயகி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களின் இதயத்தை தைக்கிறார். அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தெனாவட்டான பாடிலாங்வேஜில் படத்தில் நிஜ ராங்கியாகவே வலம் வருகிறார். போலி ஃபேஸ்புக் கணக்கால் உருவாகும் சர்ச்சையை த்ரிஷா தீர்த்து வைக்க, அதன் தொடர்பு சர்வதேச தீவிரவாதம் அளவுக்குச்

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 4, 2022

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டிஎஸ்பி. ஊரில் நண்பர்கள் வட்டத்துடன் ஜாலியாக உலா வரும் விஜய் சேதுபதிக்கும் தாதா பாஸ்கருக்கும் மோதல் ஏற்பட, நம்ம நாயகன் டிஎஸ்பி ஆகி வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பதே ஒருவரிக் கதை. திண்டுக்கல் வியாபாரிகள் சங்கத் தலைவர் இளவரசு மகனாக விஜய் சேதுபதி. நம்ம ஹீரோ பூக்கடை வியாபாரம், ஹீரோயின் குடும்பம் மிக்சர் கடை. அடடா… அருமையான பொருத்தம் போங்க… விஜய் சேதுபதி அறிமுகமாகும் ஆரம்பக்

“பவுடர்” – திரைப்பட விமர்சனம்

Posted by - November 30, 2022

உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்” திரைப்படம். ஒரு இரவில் நடக்கும் திரில் நிறைந்த சம்பவங்களே “பவுடர்” படத்தின் மையக்கரு. தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். ராகவன் என்னும் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். காக்கிச்சட்டை அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கம்பீரக் குரலும் அவருக்கு

`லவ் டுடே’ – திரை விமர்சனம்

Posted by - November 5, 2022

காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். கோலிவுட்டில் புதுமை படைத்த `கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் `லவ் டுடே’ பிரதீப் – இவனா காதல், இவனாவின் அப்பாவான சத்யராஜுக்குத் தெரிய வருகிறது. அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், காதலர்களுக்கு முக்கிய நிபந்தனையாக இருவரும் தங்களின் செல்போனை ஒருநாள் பரஸ்பரம்

“பபூன்” – திரை விமர்சனம்

Posted by - September 24, 2022

ஒரு நாடகக் நடிகனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் திருப்பங்களையும் அழகுற பதிவு செய்திருக்கிறது “பபூன்”. கால ஓட்டத்தில் கரைந்து வரும் நாடகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க நாயகன் குமரனும் நண்பன் முத்தையாவும் திட்டமிடுகின்றனர். ஆனால் அதற்கு பணம் இல்லாத நிலையில் தற்காலிகமாக லாரி ஓட்டும் பணிக்கு செல்கின்றனர். அவர்கள் கொண்டு செல்வது போதைப்பொருள் என்பது அவர்களுக்கு தெரியாத சூழலில் போலீசாரிடம் சிக்குகின்றனர். அதன் பிறகு அவர்களின் நிலை என்ன? தங்களின் லட்சியத்தை

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.