உலகளவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் இந்தியா
இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார முன்னேற்றத்தில் தனியாரின் பங்களிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை காணொளி மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா காலத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது.