“பவுடர்” – திரைப்பட விமர்சனம்
உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்” திரைப்படம். ஒரு இரவில் நடக்கும் திரில் நிறைந்த சம்பவங்களே “பவுடர்” படத்தின் மையக்கரு. தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். ராகவன் என்னும் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். காக்கிச்சட்டை அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கம்பீரக் குரலும் அவருக்கு