அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை
ஹிந்துக்களின் 500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. புன்னகை தவழும் குழந்தை ராமர் சிலை கோயில் கருவறையில் அழகுற நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீராமர் கைகளில் வில், அம்பு வைத்துள்ளபடி காட்சியளிக்கிறார். கோயிலின் கருவறை பளிங்கு கற்களாலும், ராமரின் சிலை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த கருங்கல்லினாலும் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ராமர் சிலைக்கு முதல் பூஜையை செய்து பிரதிஷ்டை விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஸ்ரீராமரின்