அகிலன் – திரை விமர்சனம்
கடல்வழி வணிகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்து சுற்றிச் சுழல்கிறது அகிலன் திரைப்படம். பூலோகம் படத்தின் அமர்க்களமான வெற்றிக்கு பின்னர், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி – இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் கூட்டணியில் வெளிவந்துள்ள படம். இந்திய பெருங்கடலில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்களின் மூலவராக வருகிறார் கபூர். அவரது இடத்தை அகிலனாக வரும் ஜெயம் ரவி கைப்பற்ற விரும்புகிறார். இதற்கான காரணமும், முயற்சிகளும் தான் படத்தின் கதை. கடைசியில் கதாநாயகன் தனது இலக்கை அடைந்தாரா என்பதை