ஜிகிரி தோஸ்த் – சினிமா விமர்சனம்
காதல், காமெடி, த்ரில்லர் ஆகிய மூன்று கலவையான அம்சங்களுடன் மூன்று நண்பர்களை சுற்றி நகர்கிறது ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், இப்படத்தின் இயக்குநர் வி.அரண், வி.ஜே.ஆஷிக் ஆகியோர் நண்பர்களாக நடித்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் அரண் உருவாக்கிய தொலைபேசி ஒட்டுகேட்புக்கான கருவி மூலம், சுமார் 500 மீட்டர் சுற்றளவில் நடக்கும் கைபேசி உரையாடல்களை கேட்க முடியும். ஆனால், தனது கல்லூரியில் பேராசிரியர்கள் முன்பு அதை விளக்கி டெமோ காட்டும்போது தோற்றுவிடுகிறார். இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு