மாலத்தீவும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்…!
பிரதமர் மோடி சமீபத்தில் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான அழகு ததும்பும் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நடைப்பயிற்சி மற்றும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்ட பிரதமர் அதுதொடர்பான புகைப்படங்களை டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், “அழகும் அமைதியும் தவழும் லட்சத்தீவு மனதை மயக்கும் இடமாக விளங்குகிறது. சாகசத்தை விரும்புவர்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம்பெற வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் குட்டி நாடான மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை பிரதமர் மோடி